காலம் மாற்றத்தை நோக்கி பயணிக்க நாமும் நமது பயணத்தை தொடங்குகிறோம். இன்றைய வாழ்க்கையில் ஒருவன் இணையத்தளத்தில் அடிமையாகாமல் இருந்தால் அவனே திறமைசாலி ஆவான்.
இன்று இருக்கும் இணையதள வாழ்க்கையில் பெரும்பாலானோர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப செயலிகளை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தி வருகின்றனர்.
அப்படி உள்ள செயலிகளில் அணைத்து நல்ல செயலிகள் அதனை நாம் உபயோகபடுத்தும் முறையை வைத்தே நமது எண்ணமானது விதைக்கப்படுகிறது. இன்றைய நவ நாகரீக காலகட்டத்தில் பெரும்பாலானோர் உபயோகப்படுத்தும் செயலியானது “டப் மேஷ்” “மியூசிக் லீ” ஆகும்.
இந்த செயலிகளில் வரும் திரைப்படங்களின் பாடல் வரிகள் மற்றும் பேச்சுக்களில் இவர்களே நடித்து இந்த செயலிகள் மூலம் வெளியிடுகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் வரை இந்த செயலிகள் பொழுதுபோக்கிற்கு மட்டுமே உபயோகபடுத்தபட்டு வந்தது.
ஆனால் தற்போது இந்த செயலிகளில் அனைவரும் நடிக்கிறேன் என்ற பெயரில் ஆபாசத்தை காட்டும் செயலியை தற்போது வளம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.