மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் வரும் வருடம் மழையானது அதிக அளவு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமானது தெரிவித்துள்ளது. மேலும் காற்று பலமாக வீசும், எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழையானது பெய்யும் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று தமிழக தென்மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையமானது நேற்று வெளியிட்ட அறிவிப்பிலேயே தமிழகம் முழுவதும் மழையானது பெய்யும் என்று அறிவித்துள்ளது. இன்றைய அறிவிப்பில் தென்மாவட்ட பகுதிகளில் அடுத்த ஒரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடல் பகுதியில் வடகிழக்கு பருவ மழைக்கான காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. மேலும் காற்று சுமார் 45 கி,மீ – 65 கி.மீ வேகத்தில் பலமாக வீசும் என்பதால் கடலுக்குள் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.