தமிழக அரசு வெளியிட்ட அரசாணை.! மொத்தமாய் குவிக்கப்பட்ட போலீசார்.!

இன்று சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா வருகின்ற நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் நேற்று இரவு முதலே சென்னையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து, தற்போது சென்னையில் குவிய தொடங்கியுள்ளனர்.

மறைந்த நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் 1917 ஆம் வருடம், ஜனவரி 17 -ல் பிறந்தார். இவர் பிறந்து தற்போது 100 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையடுத்து அதிமுக அரசு கடந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பல கோடி செலவு செய்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடியது.

இதையடுத்து, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதி (இன்று) நடைபெறும் என தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டது.

இந்நிலையில், இன்று நடக்க உள்ள இந்த விழாவிற்கு, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் நேற்று முதலே சென்னையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சாலை ஓரமாக நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள், பிரமாண்ட கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் யாரும் எதிர் பார்க்கமுடியாத அளவிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட உள்ளனர்.

அறிவிக்கப்பட்டது போலவே சென்னை வரும் முக்கிய சாலைகள் நேற்று முதல் போக்குவரத்து நெரிசலுடனே காட்சியளிக்கிறது.