திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று முன்தினம் ரன்விர்ஷா வீட்டை இடித்து சோதனை செய்ததில் 60க்கும் மேற்பட்ட சிலைகளும் அறிய கல் தூண்களும் கிடைக்கப் பெற்று உள்ளன. இதில் நான்கு ஐம்பொன் சிலைகளும் இருக்கின்றது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை செய்து சிலைகளை கண்டுபிடித்துள்ளனர். இதன் எதிரொலி தான் இன்று ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். முழு சோதனைக்கு பிறகுதான் எத்தனை சிலைகள் சிக்கும் என்று தெரியவரும்.