ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசானது பல்வேறு வகையான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் சுமார் 55 இடங்களை தேர்வு செய்துள்ளது.
மேலும் இந்த இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அதன் படி சிதம்பரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திற்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் பணிகளை மேற்கொள்ள அனுமதி நாளை (அதாவது திங்கள் கிழமை) டெல்லியில் பெட்ரோலிய துறை அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை என்ன நிலைமையில் சென்று முடியப்போகிறது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
” எங்கெல்லாம் தமிழும் தமிழனும் ஒடுக்கப்படுகிறதோ., அவர்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறதோ., அங்கெல்லாம் நமது காவல் தெய்வங்கள் உதித்து அந்த பிரச்னையை தீர்த்தாக வேண்டும் – அவர்களே நமது காவல் தெய்வங்கள் ” என்பதே நமது முன்னோர்களின் வாக்கு., அது நிச்சியம் நடந்தே தீரும்…………