வாய்க்கு பூட்டு போட்டு பூட்டிக்கொண்ட விவசாயி!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு, விவசாயி ஒருவர் வாயில் சங்கிலி பூட்டுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் அரசின் குறைகளை கூருவத்திற்கு, குறிப்பிட்ட சில விவசாயிகளை பேச அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த விவசாயிகள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டியுள்ளனர்.

அப்போது தமிழ்செல்வன் என்ற விவசாயி, தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வாயில் சங்கிலி பூட்டு போட்டு, மாவட்ட வருவாய் அலுவலருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் குறை தீர்க்கும் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.