பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 2 . விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற போவது ரித்திகாவா? ஐஸ்வர்யாவா? என ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கோபத்தாலும்,அத்துமீறிய செயல்களாலும் மக்களின் கோபத்திற்கு ஆளானவர் ஐஸ்வர்யா. இவர் தனது இடது கையில் கோபி என்ற பெயரை பச்சை குத்தியிருந்தார்.
மேலும் கோபிதான் நான் இங்கு வருவதற்கு முக்கிய காரணம்.அவர் இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க மாட்டேன் என பல நேரங்களில் கோபியை பற்றி ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவுடன் பேசியுள்ளார்.
மேலும் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்டவர்களுடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பை கொடுத்தனர். அப்பொழுதும் ஐஸ்வர்யா கோபி என்பவரிடமே பேசினார். அப்பொழுது அம்மா,அப்பா, நளினி நல்லா இருக்காங்களா? என கேட்டார்.
இதுகுறித்து ரசிகர்களிடையே பெரும் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் கோபி குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .
கோபி என்ற கோபி கிருஷ்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களுக்கு குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி மக்களிடம் பல லட்சம் ரூபாயை முன்பணமாக வாங்கி பல பேரை ஏமாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு கோபி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அப்பொழுதே அவரது திருட்டு மோசடியில் ஐஸ்வர்யா, நளினி ஆகியோரும் தொடர்பில் உள்ளனர் என செய்திகள் வெளியானது .
ஆனால் தற்போதுதான் அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா என்பது தெரியவந்துள்ளது.மேலும் பல வழிகளில் முயற்சி செய்து அடம்பிடித்து தான் ஐஸ்வர்யா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.