தன்னுடைய தாயை ஆபாசமாக திட்டியதால், மகன் நண்பனின் தலையை வெட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் சிக்கபாகிலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிரிஷ் அதேப்பகுதியை சேர்ந்தவர் பசுபதி.
இவர்கள் இருவரும் நண்பர்களாக உள்ளநிலையில் கிரிஷுக்கும், பசுபதியின் தாய்க்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிரிஷ் பசுபதியின் தாயை அவதூறாக பேசியதோடு மட்டுமின்றி, ஆபாசமாகவும் திட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பசுபதி இது குறித்து அவரிடம் கேட்ட போது, இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பசுபதி திடீரென அருகில் கிடந்த கோடரியால் கிரிஷின் தலையை வெட்டியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் துடித்த கிரிஷ் சம்பவ இடத்திலேயே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
அதன் பின் பசுபதி துண்டித்த தலையை கையில் எடுத்து கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்த காவல்நிலையத்திற்கு சென்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பொழுது எனது தாயை ஆபாசமாக திட்டியவரை ஒன்றும் செய்யாமல் விட்டால், நான் வாழ்வதற்கே தகுதியில்லை. அதனால் தான் தலையை வெட்டினேன் என்று கூறியுள்ளார்.