ஐஸ்வர்யாவாக மாறிய போஷிகா…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருந்த நிலையில் பாலாஜி வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவதற்கு முன்பாக பாலாஜி மேடையில் பேசியது அணைத்து ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது.

அதே போல இதுநாள் வரை பாலாஜி வெளியில் வந்ததும் நித்யாவுடன் சேர்ந்து விட மாட்டாரா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான விடையும் தற்போது கிடைத்ததுள்ளது.

சமீபத்தில் பாலாஜி, நித்யா மற்றும் அவரது குழந்தை போஷிகாவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இதன் மூலம் நித்யா, பாலஜியுடன் சேர்ந்து வாழ தூங்கிவிட்டாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த பாலாஜிக்கும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாலாஜிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது அதனை கமலே கூட குறிப்பிட்டு சொன்னார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெருவதற்கு முன்பாக மேடையில் தனது மனைவியையும், மகளையும் கண்டு மிகவும் கண்கலங்கி நின்றார்.

பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை அதிகம் உச்சரித்த பெயர் என்றால் அது அவருடைய மகள் போஷிக்கா தான். பிக்பாஸ் வீட்டில் நித்யா இருந்த போது அவர் மீது கடுமையாக நடந்து கொண்டாலும் நாட்கள் செல்ல செல்ல நித்யாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டார் பாலாஜி.

தற்போது பாலாஜி, நித்யாவிடம் போஷிகா பிக்பாஸ் வீட்டிற்குள் ஐஸ்வர்யா நடந்துகொள்வது நடித்துக் காட்டியுள்ளார்.