ரவை – 1 கப்
சர்க்கரை – 1.5 கப்
தேங்காய்த்துருவல் – 1 கப்
ஏலக்காய் – 7
நெய் – 1/2 கப்
முந்திரிப்பருப்பு – 10
செய்முறை:
1.வானலியில் 3 டேபிள்ஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கவும். இதில் ரவையைச் சேர்த்து மிதமான வெப்பத்தில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
2. வறுத்த ரவையை தனியே எடுத்துவைக்கவும். வானலியில் 3 மேஜைக்கரண்டி நெய் விட்டு தேங்காய்த்துருவலை லேசாக வறுத்துக்கொள்ளவும்.
3. சர்க்கரையையும், ஏலக்காயையும் பொடியாக பொடித்துக்கொள்ளவும்.
4. வானலியில் 3 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பை லேசான பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். நெய்யிலிருந்து வறுத்த முந்திரியை வடித்தெடுத்து தனியே வைக்கவும்.
5. எஞ்சியுள்ள நெய்யை வானலியில்விட்டுச் சூடாக்கவும். இதனுடன் பொடிசெய்த சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும் .
6. சர்க்கரை மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். தண்ணீர் கொதித்து பாகுபோல் திரண்டுவரும்போது ரவையும், தேங்காய்த்துருவலும் சேர்த்து கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.
7. ரவை, சர்க்கரை, தேங்காய் எல்லாம் ஒன்றாகக்கலந்து உருண்டைபிடிக்கும் பதத்திற்கு வந்ததும் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். லேசாக ஆறவைக்கவும்.
8. உருண்டைபிடிக்கும் பதம் இதற்கு மிகவும் முக்கியம் – ரொம்ப குழகுழப்பான கூழ் போன்றோ / ரொம்பவும் வறண்டு ரவையும், சர்க்கரையும் சேர்த்து கட்டிகளாக மாறும் தன்மையுடனோ இருக்கக்கூடாது.
9. லேசான சூட்டுடன் இருக்கும்போதே உருண்டைபிடிக்க ஆரம்பிக்கவும். உருண்டைபிடிக்க – பிளாஸ்டிக்தாளினை (8″ X 8″) அளவிலான சதுர துண்டுகளாக நறுக்கி தயாராக வைத்துக்கொள்ளவும்.
10. பிளாஸ்டிக்தாளினை விரித்துவைத்து,அதன்மேல் ரெண்டு டேபிள்ஸ்பூன் அளவிலான லட்டு கலவையை வைக்கவும். பிளாஸ்டிக்தாளின் ஓரங்களை ஒன்றாகச் சேர்த்து ஒருகையில் பிடித்துக்கொண்டு, மறுகையால் அடிப்பகுதியில் உள்ள லட்டு மாவை இறுக்கி திருகிக்கொண்டே வரவும். இப்போது உள்ளே பந்து போன்று லட்டு உருண்டுவிடும். இதேபோல் எல்லாவற்றையும் உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும். ரவாலட்டு தயார்.
குறிப்பு
1.குளிர்ந்த தண்ணீரில் கையை நனைத்துவிட்டு உள்ளங்ககையில் வைத்தும் லட்டு பிடிக்கலாம்.
2. சர்க்கரையின் அளவு அவரவர் விருப்பத்திற்கேற்ப கூட்டியோ/ குறைத்தோ சேர்த்துக்கொள்ளவும்.
3. முந்திரிப்பருப்புடன் பிஸ்தா,பாதாம்பருப்பு, உலர்ந்த திராட்சை வறுத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.
4.ரவையும், தேங்காய்துருவலும் நிறம்மாறாத அளவுக்கு லேசாக வறுக்கவும்.
5. உலர்ந்த தேங்காய்த்துருவல் (dry coconut powder) பயன்படுத்திச் செய்யும்போது தேங்காயை வறுக்கத் தேவையில்லை.
6.பிரஷ்ஷான தேங்காய்த்துருவல் பயன்படுத்தும்போது லேசாக வறுத்துச் சேர்க்க லட்டு நீண்டநாள் கெடாமல் இருக்கும்