திருமணமான மறுநாளே மனைவியை நண்பர்களுடன் பகிர்ந்த கணவன்!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திர பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் நடந்தது. அவர்கள் இருவருக்கும் செப்டம்பர் 12 ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணமான மறுநாளே மனைவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்துள்ளார் கணவர். மனைவி மயங்கியவுடன், கணவர், கணவரின் சகோதரர் உட்பட 7 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மயக்கம் தெளிந்த புதுப்பெண் நடந்ததை அறிந்து கதறி அழுதுள்ளார் அந்த புதுப்பெண். மேலும் நடந்த சம்பவம் பற்றி அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து புது பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பபட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது