சென்னையின் முக்கிய அடையாளங்கள் பெயர் மாற்றப்படுகிறது.! முதலமைச்சர் அறிவிப்பு.!

மறைந்த நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் 1917 ஆம் வருடம், ஜனவரி 17-ல் பிறந்தார். இவர் பிறந்து தற்போது 100 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையடுத்து அதிமுக அரசு கடந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பல கோடி செலவு செய்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடியது.

இன்று (30.9.2018) சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா வருகின்ற நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் நேற்று இரவு முதலே சென்னையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து, தற்போது சென்னையில் நடைபெற்றுவரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள்உட்பட பலரும் கலந்து கொடு உரையாற்றி வருகின்றனர். பாதுகாப்பு பணியின் அதிக அளவில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

* கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்.

* பள்ளிக்கரணையில் ரூ 31 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்படும்.

* ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கி.மீ நீளமுள்ள மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்.

* சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.