நடிகர் கமல் இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது பைனலில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த சீசனில் கமல் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானார். ஐஸ்வர்யா உள்ளிட்ட சில போட்டியாளர்களை கமல் அதிகம் கண்டிக்காதது தான் காரணம்.
இந்நிலையில் இன்று 3வது பிக்பாஸ் சீசனிலும் கமல் தொகுத்து வழங்குவாரா என பார்வையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் “பண்ணுனுமா வேண்டாமா?” என திருப்பி கேள்வி கேட்டார். அதற்கு அந்த
பெண் “பண்ணனும்” என கூற, உடனே கமல் “பண்ணிட்டா போச்சு” என கூறினார்.
இதனால் அடுத்த சீசனிலும் கமல் தொடரவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.