திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் கைது!

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில், பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சப்தர் அப்பாஸ் என்ற இளைஞரும், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2014-ல் துபாய்க்கு செல்ல முடிவெடுத்த அப்பாஸ் உடன் தனது காதலியையும் அழைத்து சென்றுள்ளார்.

மேலும், அப்பெண்ணை தான் திருமணம் செய்யவேண்டுமெனில் இஸ்லாம் மதத்துக்கு அவர் மாறவேண்டும் என அப்பாஸ் கூற அப்பெண்ணும் மாறியுள்ளார்.

இதனிடையில் இந்தாண்டு இருவருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தார் ஒத்து கொண்ட நிலையில் ஏப்ரல் 17-ல் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அப்பாஸும், அவர் காதலியும் ஹைதராபாத்துக்கு திரும்பிய நிலையில் திடீரென அப்பாஸ் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தினார்கள்.

அதாவது, சட்டபூர்வமாக ஹஜ்ஜுக்கு சென்று ஆவணத்தில் இஸ்லாமியராக மாறியதாக அப்பெண் பதிவு செய்ய வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து காதலியிடம் துபாய்க்கு சென்று வேலையை முடித்த பின்னர் வந்து திருமணம் செய்துகொள்ளலாம் என அப்பாஸ் கூற இருவரும் அங்கு சென்றனர்.

ஆனால் அங்கு சென்றவுடன் இனி உன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என அப்பாஸ் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதன்பின்னர் ஹைதராபாத்துக்கு திரும்பிய அப்பெண் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார். அப்பாஸ் தன்னை பலாத்காரம் செய்தார் மற்றும் ஏமாற்றிவிட்டார் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் வந்த அப்பாஸை பொலிசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.