இந்தியாவின் பஞ்சாப்பில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தார், இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உமேஷ்குமார் (26) என்ற இளைஞரும் மது (22) என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதலுக்கு மதுவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு ஓடிய உமேஷும், மதுவும் தனி வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில் குடும்பத்தினர் மிரட்டல் காரணமாக மீண்டும் கடந்த 22-ஆம் திகதி இருவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
இதையடுத்து நேற்று மதுவின் சகோதரர் அஜித்குமார், தந்தை ரமேஷ் மற்றும் தாய் கலாவதி ஆகியோர் உமேஷுக்கு போன் செய்து அவரை சந்திக்க வேண்டும் என கூறி தங்கள் வீட்டுக்கு அழைத்துள்ளனர்.
உமேஷ் அங்கு சென்ற நிலையில் மூவரும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தனர்.
இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் மூவரையும் கைது செய்துள்ள பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.