உங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம், குழந்தை.. ஆத்திரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன்.!

தனது விருப்பப்படி தான் வாழ்வேன் என்று நினைப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் அல்லது குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ளாமல் இருங்கள் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆண்களோ அல்லது பெண்களோ திருமணத்திற்கு பிறகு தகாத உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றமல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .

இது குறித்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் நான் இந்த தீர்ப்பை மதிக்கிறேன். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நான் பல வருடங்கள் நடத்திய அனுபவத்தில் இந்த தீர்ப்பால் சமூகத்தில் இனி வரக்கூடிய பிரச்சினைகளை என்னால் முன்கூட்டியே உணரமுடிகிறது.

ஒவ்வொருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் உனக்கு நான், எனக்கு நீ என்று கூறி கரம் பிடிக்கின்றனர். ஆனால் இந்த எண்ணத்தில் இருந்து விலகுவது என்னை பொறுத்தவரை பெரிய துரோகம்.மேலும் வேறு வழியே இல்லை என்றால் சட்டப்படி விவாகரத்து வாங்கிக் கொள்வது நல்லது.

திருமணம் தாண்டிய தகாத உறவுகள் குடும்பங்களை ஆணிவேரோடு அகற்றிவிடும் .ஒவ்வொருவரும் திருமணத்திற்குப் பின் தங்களது விருப்பப்படி வாழ எண்ணி அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று சென்றுவிடுவதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு வாழ நினைப்பவர்கள் கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள் அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாமல் இருங்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனையுடன் கூறியுள்ளார் .