இலங்கையில் பெய்து வரும் அடைமழை காரணமாக காலி நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று மாலை மற்றும் இரவு பெய்த அடைமழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காலி – வெக்வெல்ல, காலி – மாபலகம காலி – பத்தேகம, காலி – யக்கலமுல்ல, காலி – அக்குரஸ்ஸ, காலி – உடுகம ஆகிய வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.
ஒரு மணித்தியாலத்திற்கு அதிக நேரம் அடைமழை பெய்தமையினால் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கண்டி, அக்குரண பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.