சென்னையை சேர்ந்த புஸ்பலதா என்பவரும் அவரது கணவர் ஜான்பாலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் புஸ்பலதா தற்கொலை செய்துகொண்டார்.
திருமணமல்லாத பாலியல் உறவு கிரிமினல் குற்றமல்ல என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கணவருக்கு எதிராக வழக்குப் பதியலாம் என உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில் புஸ்பலதாவுக்கு காச நோய் இருந்துள்ளது. அவர் அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். தமக்கு நோய் இருப்பதை அறிந்த எனது கணவர் தம்மிடம் நெருக்கமாக பழகுவதில்லை என தமது தோழிகளிடம் புஸ்பலதா கூறிவந்துள்ளார்.
மேலும் ஜான்பாலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக புஸ்பலதா தெரிந்துகொண்டார். இதனையடுத்து இரவு வீட்டிற்கு தாமதமாக வந்த கணவரிடம் வாக்குவாதத்தில் ஏற்பட்ட புஸ்பலதா, இதே நடவடிக்கை நீடித்தால் காவல்துறையில் புகார் அளிப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, தகாத உறுவு பற்றி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எனக்கு சாதகமாக இருப்பதாகவும், தம்மை ஒன்றும் செய்ய முடியாது எனவும் ஜான் பால் மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த புஸ்பலதா மனமுடைந்து நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.