இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது. இதுதான் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது.
எப்படி இந்த நிலநடுக்கம் சுனாமியை உண்டாக்கியது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 1200 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் என்பது நிலத்தின் அடுக்குகள் கிடைமட்டமாக நகர்வது காரணமாக உருவானது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.2004ல் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது மேல்கீழாக அடுக்குகள் நகர்வதால் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இதுதான் கடல் நீரை மொத்தமாக வெளியே கொண்டு வந்து கொட்டும். அதுதான் அப்போதும் நடந்தது.
ஆனால், தற்போது கிடைமட்டமாக ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் இருந்துள்ளது.
எப்படி இந்த நிலநடுக்கம் தண்ணீரை வெளியே கொண்டு வந்து கொட்டியது. 5 மீற்றர் வரை எப்படி அலையை உயர செய்தது என விஞ்ஞானிகள் குழப்பமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.