அப்போலோ காட்சிகள் வெளியாகிறதா..? ப்ரியதர்ஷினி பரபரப்பு பேட்டி.!

தமிழகத்தில் இரண்டாவது பெண் முதல்வராகவும் இரும்பு பெண்மணியாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தை பாரதிராஜா, பிரியதர்ஷினி , தசாரி நரசிம்ம ராவ், ஆதித்யா பரத்வாஜ் மற்றும் ஏ.எல் விஜய் ஆகிய 5 இயக்குனர்கள் எடுக்க திட்டமிட்ட நிலையில், தான் எடுப்பதாக இயக்குனர் பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை வரலாறு படம் பல பாகங்களில் உருவாக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் திரைப்பட பாகத்தின் முதல் போஸ்டரை, பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வெளிட்டார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதியாகவில்லை.

இந்த நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த, இயக்குனர் பிரியதர்ஷினி,

படத்தை 1960ல் இருந்து ஆரம்பிக்க உள்ளேன். அதற்கான முழு வேலைகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

அதற்காக நிறைய உழைப்பும் தேவைப்படுகிறது. படத்துடைய ஷூட்டிங் ஜெயலலிதாவுடைய பிறந்த நாள் அன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்; என கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா இறப்பு பற்றி இன்னும் அதிகாரபூர்வமா செய்திகள் வரலை. நீதிமன்றத்துலயும் வழக்கு போயிட்டிருக்கு. சட்டப்படி அதை நான் சொல்லவும் கூடாது. அப்போலோ சம்பந்தப்பட்ட எந்தக் காட்சிகளும் படத்துல இருக்காது’ என்று கூறியுள்ளார்