அதிமுக விரித்த வலையில் சிக்கிய திமுக முக்கிய புள்ளி..!

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, கடந்த 2011ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இதற்கு எதிராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய மூவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்தார்.

இதன் பின்னர், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முறைகேடு புகார்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், புதிய நீதிபதியை நியமித்து விசாரணை ஆணையத்தைப் புதுப்பிக்கும் திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.

இதில் அடுத்த கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.இந்த வழக்குகள் அனைத் தும், உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, விசாரணை ஆணையம் கலைக் கப்பட்டதால், வழக்கை திரும்பப் பெறுவதாக மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசியல் காரணங்களுக்காக, அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாற்றப் பட்டதில், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதோடு, முறைகேடு குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து, அதன் மூலமும் 5 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளதாக நீதிபதி குறிப் பிட்டார்.

ஒரு அரசு கட்டிய சட்டப்பேரவையை மாற்றியமைக்கவும், அழகுபடுத்துவதற்கும் பணம் வீணடிக்கப்படுவதாக கூறிய நீதிபதி, வரிப் பணம் வீணடிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்ப ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆணையத்தை எதிர்த்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற அனுமதியளித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் வழக்கை தள்ளுபடி செய்தார்.