இளைஞர்களால் இன்று யாழில் இடம்பெறவுள்ள புரட்சி!

காரைநகரின் நுழைவாயிலில் ஐந்து நட்டசத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள காரைநகர் பிரதேச சபை, அதற்கு அண்மையில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்காரைநகர் இளைஞர்கள் மற்றும் சைவ மகா சபையினர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

காரைநகர் மண் உயரிய பண்பாட்டு கலாச்சாரம் மிக்க மக்கள் வாழ்ந்து வரும் நிலப்பரப்பாகும். அதன் பாரம்பரியம் மிக்க பண்பாடு காலாசாரத்தினை பாதுகாக்க வேண்டிய கடைப்பாடு காரைநகர் மக்களையும் இளைஞர்களையும் சாரும். சிவதலமாம் ஈழத்துச் சிதம்பரத்தை தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமியில் வாழும் பாக்கியம் கொண்ட நாங்கள் அதன் புனிதத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையதேயாகும்.

அப்படியான எமது மண்ணின் கலாசாரத்தினை சீர் கெடுக்கும் நோக்கில் காரைநகர் பிரதேச சபையினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றாக வலந்தலைச் சந்தியில் நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட விடுதி ஒன்றிற்கு அனுமதி அழித்துள்ளதுடன் அவ் இடத்திற்கு நேர் எதிரே சைவமகா சபையினால் நிர்மானிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த சிவன் சிலையின் நிர்மாணப்பணிகளை தடுத்து நிறுத்தியிருப்பதுடன் அங்கு நின்ற சைவமகாசபை உறுப்பினர்களை அச்சுறுத்தியதுடன் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் அவ் நட்சத்திர விடுதி அமைப்பது தொடர்பான கோரிக்கைகளை உரிமையாளர் முன்வைக்கும் போது அதற்கு உடனடியாக விரைந்து செயற்பட்டதுடன் தனது சிறப்பு அதிகாரத்தினை பயன்படுத்தி (சுகாதார வைத்திய அதிகாரியால் அனுமதி நிராகரிக்கப்பட்ட பின்பும்) அனுமதி வழங்க திட்டமிட்டமை மற்றும் விடுதி தெடர்பான நிகழ்வுகளில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டமை ஆகியன பிரதேச சபைக்கும் இவ் விடுதி உரிமையாளருக்கும் இடையில் இடம்பெறும் தொடர்பினை சந்தேகத்திற்கு உரியதாக்கின்றது.

கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நாம் இன்றைய தினம் (03.10.2018) புதன்கிழமை காரைநகர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும் கையெழுத்து வேட்டை ஒன்றினையும் மேற்கொள்ள உள்ளோம் அதற்கு தங்கள் ஒத்துழைப்பினை நாடி நிட்கின்றோம் என காரைநகர் இளைஞர்கள், பொது மக்கள் மற்றும் சைவ மகா சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.