அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வெரோ பீச் என்ற பகுதியில் வசித்து வருபவர் 27 வயது நிரம்பிய இளம்பெண் காதெரின் தவரெஸ். இவர் சம்பவத்தன்று காதலனுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வீட்டில் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். காதெரினுக்கு போதை ஏறியதால் காதலனுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து தன் காதலனை தன்னுடன் உறவு கொள்ளுமாறு காதெரின் கேட்டுள்ளார். காதலன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காதெரின், உச்சகட்ட போதையில் அங்கு இருந்த ஒரு பெரிய கத்தியால் காதலனின் முகத்தில் பல முறை சரமாரியாக குத்தியுள்ளார். இந்நிலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து போலிசாரால் காதெரின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு நடந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.