ரோஹித் விரித்த வலையில் சிக்கிய கோலி – நிலை குலைந்து போன பி.சி.சி.ஐ..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையே நடந்தது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

வங்கதேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்தனர். முதல் 20 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது வங்கதேச அணி.

இறுதியாக லிட்டோன் தாஸ் 121 ரன்களில் வெளியேறினார்கள். சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ஓட்டங்கள் அடிக்க வங்கதேச அணி 48.3 ஓவரில் 223 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் லிட்டன் தாஸ், 117 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இவரது சதத்தின் உதவியுடன் வங்கதேச அணி 222 ரன்கள் எடுத்தது.

லிட்டன் தாஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார்.

முதலில் களத்தில் இருக்கும் நடுவருக்குக் குழப்பம் வரவே, முடிவு மூன்றாவது நடுவருக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேர ஆய்வுக்குப் பின்னர் நடுவர் அவுட் என்று அறிவித்தார்.

இதில் உருவான சர்ச்சை தான் வங்கதேச இரசிகர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது. இன்னும் இந்திய அணியுடனான தோல்வியில் இருந்து மீண்டு வராத அவர்கள், ஆசிய கோப்பைக்கு கேப்டனாக ரோஹித் செயல்பட்ட போதிலும், இன்று விராட் கோலியின் இணையதளத்தை ஹாக்கர்கள் கொண்டு முடக்கி அதிர்ச்சியடைய செய்துள்ளனர்.

அதில், நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இணையதளம் மீண்டும் மீண்டும் ஹேக் செய்யப்படும்.

விளையாட்டில் அனைத்து அணிகளும் சமமாக ட்ரீட் செய்யப்பட வேண்டும். இறுதி வரை இதற்காக நாங்கள் போராடுவோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.