சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அனுமதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அவர்கள் வழக்கம் போல உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து உடலில் பிரச்சனை இருந்ததால் 3 முறை வெளிநாடு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார்.
அண்மையில் கூட அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டு அவர் மனப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் மீண்டும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் விசாரித்ததில் வழக்கம் போல உடல் பரிசோதனை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.