சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சர்க்கார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இணையும் மூன்றாவது படம் சர்க்கார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி போன்ற படங்களில் விஜய் இணைந்து நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்திருந்தன. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் பேசுகையில், நடிகர் விஜய் அகில உலக தளபதியாக வருவதற்கு ரஜினிகாந்தை போன்று இனிமேல் 3 டி படங்களில் நடிக்க வேண்டும். மேலும், அவருடைய நேர்மை, எளிமை, உழைப்பு, தன்னடக்கம் ஆகியவை அனைவரும் அறிந்ததே என்று கூறினார்.
இப்படத்தின் சிம்டங்கரான், ஒரு விரல் புரட்சி ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மிக பிரமாண்டமாக நடந்தது. இதில், கல்லூரி மாணவர்கள், ஏராளமான ரசிகர்கள், என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், படக்குழுவினர், கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் கலாந்திமாறன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், என்று திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.