விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் விரைவில் வெளியாக உள்ளது சர்க்கார் திரைப்படம். இப்படத்தில் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
ஏற்கெனவே சிம்டங்க்கரன் மற்றும் ஒருவிரல் புரட்சியே என்று இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் மற்ற பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த இவ்விழாவில் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, படக்குழுவினர் மற்றும் பிற நடிகர்களும் கலந்துகொண்டனர்.
மிகப்பெரிய அளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழாவை தியா மேனன் மற்றும் நடிகர் பிரசன்னா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
சர்கார் படத்தில் ஆடியோவை இதுவரை எந்த படங்களிலும் இல்லாத வகையில், மக்களே வெளியிடுமாறு வடிவமைத்தனர்.
கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பலரும் விஜய்யை வாழ்த்திப் பேசினர்.
அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், நாங்கள் சர்காரை ஆரம்பித்துவிட்டு தேர்தலில் நிற்கிறோம். எல்லோரும் படத்துக்கு ஓட்டு போடுங்க என்றார்.
அப்போது, நிஜத்தில் நீங்கள் முதல்வர் ஆனால் எதை மாற்றுவீர்கள் எனக் கேட்கப்பட்டத்துக்கு, கற்பனையா தான கேக்குறீங்க.
இந்த படத்தில் நான் முதல்வராக நடக்கவில்லை. நிஜத்தில் நான் முதலமைச்சரா ஆன நடிக்க மாட்டேன்.
ஒரு மாநிலத்துல தலைவன் நன்றாக இருந்தால் ஒரு மாநிலமும் தானாக வளரும். தர்மம்தான் ஜெயிக்கும். நியாயம்தான் ஜெயிக்கும். ஆனா கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும்’ என்று பேசி ஒரு அரசியல் பொறியை கிளப்பியுள்ளார்.