தென்மேற்கு பருவமழையானது கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்ததாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் புதிய புயல் சின்னம் இன்னும் 3 நாட்களுக்குள் உருவாக வாய்ப்புள்ளதாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உள்ள கேரளா மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியின் ஆரம்பிக்கும் பகுதியான கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,
காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.