11 வருட திருமண வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் செய்த மனைவி: கணவனின் கண்ணீர்

ப்ரூக் மற்றும் மேட் ஆகிய இருவரும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இவர்களின் அன்பான திருமண வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு குழந்தை உள்ளது.

என்னதான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தாலும், அவ்வப்போது எனது மனைவி சோகமாக இருப்பாள். இதனை நான் பலமுறை அவளிடம் கேட்டுவிட்டேன்.

ஆனால், உங்களை திருமணம் செய்திருக்கையில் வாழ்க்கையில் எனக்கென்ன கவலை என்று கேட்டு என்னை சமாதானம் செய்துவிடுவாள்.

இருப்பினும், அவளது பதில் உண்மையில்லை என்பதை மட்டும் தெரிந்துகொண்டேன், காலப்போக்கில் சரியாகிவிடுவாள் என்ற நம்பிக்கையில் கடந்த 11 ஆண்டுகளாக வாழ்க்கையை கழித்தேன்.

அதுவும் எனது குழந்தைக்காக, இந்நிலையில் தான் எனது மனைவி திடீரென என்னிடம் விவாகரத்து கோரினாள். காரணம் கேட்டதற்கு, எனக்கு இந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை, சலிப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால் நாம் இருவரும் எவ்வித சண்டை சச்சரவுகள் இன்றி சமாதானமாக பிரிந்துவிடுவோம் என்று கூறி என்னை வற்புறுத்தினாள்.

அவளது வற்புறுத்தலால் விவாகரத்து வழங்கினேன். விவாகரத்து செய்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்தான் எனக்கு தெரியவந்தது அவள் என்னை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் வேறு ஒரு நபரை காதலித்துள்ளார்.

என்னுடனான திருமண வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாள். சுமார் 11 வருடங்கள் என்னுடன் சேர்ந்து வாழ்ந்தபோது அவ்வப்போது அவள் சோகமாக இருந்ததற்கு காரணம் அவளது முதல் காதலே. இதனை அவள் என்னிடம் திருமணத்திற்கு முன்னரே தெரிவித்து பிரிந்து சென்றிருக்கலாம்.

ஆனால், 11 வருட திருமண வாழ்க்கையில் என்னிடம் பொய்கூறி எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாள், இதனால் எனது வாழ்க்கை வீணாகிவிட்டது என கூறியுள்ளார்.