பெரிய இடத்தில் கைவைத்த கருணாஸ்! அதிர்ச்சியில் அதிமுகவினர்!

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் அதிமுக எம்எல்ஏக்கள் மூவரை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினர் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிமுக அரசுக்கு ஆதரவளித்து வரும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் ஆதரவு நிலையில் உள்ளார்கள்.எம்எல்ஏக்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூவரும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களுடன் சேர்த்து அண்மையில் சர்ச்சையில் சிக்கிய கருணாஸ் உள்ளிட்டோரின் பதவியையும் தகுதி நீக்கம் செய்யவும் தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறிகொண்டிருக்கிறது

இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் இல்லத்தில் தினகரன் ஆதரவாளர்கள் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், ரத்தினசபாபதி, கதிர்காமு, முருகன், சுப்பிரமணியன், ரங்கசாமி உள்ளிட்டோர் சந்தித்துள்ளார்கள்.

இந்த சந்திப்பில் எது குறித்து பேசுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சந்திப்பு குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் கொடுத்துள்ளார். சபாநாயகர் நோட்டிஸ் விடுவதாக உள்ள செய்தி குறித்தும், கைது செய்யப்பட்டது குறித்தும் சந்திப்பில் பேச்சு வார்த்தை நடந்ததாக அவர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக சபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும் என கருணாஸ் வலியுறுத்தியுள்ளார். சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் கருணாஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளார். சட்டப்பேரவையை கூட்டி தனபாலை தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு கருணாஸ் தரப்பு மனு சட்டசபை செயலாளரிடம் மனு அளித்துள்ளதால் ஆளுங்கட்சி வட்டாரம் பதற்றத்தில் உள்ளது.