இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில், சிறைகளும் இடிந்ததால், ஆயிரக் கணக்கான கைதிகள் தப்பி ஓட்டம்….!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, ஆயிரக் கணக்கானோர், பலியானார்கள். நுாற்றுக் கணக்கானோர், இடிபாடுகளில், சிக்கித் தவிக்கின்றனர்.
இந்தக் கொடுமையான சம்பவத்தால் பலியானவர்களின் சடலங்கள் கூட இன்னும் கிடைக்கவில்லை. அவற்றை அப்புறப்படுத்தும் பணியிலும், அங்குள்ள காவல் துறையினர், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நில நடுக்கத்தால், 3 சிறைகளின் கட்டிடங்கள் பெயரந்து விழுந்தன. இதனால், இந்த சிறைகளில் இருந்த ஆயிரக் கணக்கான கைதிகள் தப்பி ஓடினர்.
நில நடுக்கத்தின் போது, பலு நகரில் இருந்த இரண்டு பெரிய சிறைச்சாலைகள் இடிந்து விழுந்தன. சுற்றுச் சுவர்கள் முழுவதும், சிதிலமடைந்து விழுந்தன. இதில் இருந்து நுாற்றுக் கணக்கான கைதிகள், தப்பிச் சென்றி விட்டனர்.
இதே போல, டோங்கலா நகர சிறையிலிருந்தும் 343 கைதிகள் தப்பி ஓடி விட்டனர். இவர்கள் தப்பிச் செல்லும் போது, சிறைக்குத் தீ வைத்து விட்டுச் சென்றனர்.
அவர்களைப் பிடிக்க இயலாமல், இந்தோனேசியா போலீசார் தவித்து வருகின்றனர். மக்களைக் காப்பாற்றுவதா? தப்பி ஓடிய சிறைக் கைதிகளைப் பிடிப்பதா? என்று அவர்கள் திணறி வருகின்றனர்.