உச்சத்தை அடைந்த தங்கத்தின் விலை..! பொதுமக்கள் அவதி..!

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.336 அதிகரித்து இன்று ரூ.23,840க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 42 ரூபாய் உயர்ந்து ரூ.2,980 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.3,126க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.25,008க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியும் ஒரு கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.42க்கு விற்பனை செய்யப்படுகிறது.