இந்தியாவில் பணமதிப்பு நடவடிக்கை அறிவிக்கபட்ட சில தினங்களுக்கு பின், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக பெரிய சரிவை சந்தித்தது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.68.65 என்ற அளவுக்கு சரிந்தது, அப்போது அது தான் இந்திய வரலாற்றில் அதிகபட்ச சரிவாக இருந்தது.
ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.53 ஆக சரிந்தது. அதற்க்கு பின் தொடர்ந்து மேலும் சரிந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.88 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று (3/10/2018) அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, புதிய உச்சத்தில் வீழ்ந்த இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிந்துள்ளது.
ஒரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மற்றொரு பக்கம் இந்திய ரூபாயின் வீழ்ச்சி என நாட்டில் ஒரு அசாரதமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சட்டி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் விவசாயிகளும் தங்களது பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.