நாளை ஆசிரியர் போராட்டம்.!! திடீரென கல்வித்துறையில் இருந்து பறந்துவந்து அதிரடி உத்தரவு..!

ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும். நாளை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசு இவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல், விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடிக்கப்படும் என தமிழக அரசு அச்சுறுத்துகிறது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தகவல் வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பள்ளிகள் இயங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் விபரங்களை காலை 9:45 மணிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.