விபத்தில் மனைவி மரணம்! அதிர்ச்சியில் கணவரும் மரணம்!

சிறுமுகையில் வசித்து வந்தவர்கள் சண்முகம் (வயது 65)  – பாலாமணி (வயது 58) தம்பதி.  சண்முகம் சவுத் இண்டியன் விஸ்கோஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார்.  அந்நிறுவனம் மூடப்பட்டதும சிறுமுகையிலேயே வசித்து வந்தார்.

இவர்களது மகன் ஜெர்மனியில் பணிபுரிகிறார்.

இந்த நிலையில் இன்று சாலை இருசக்கரவாகனத்தில் அன்னூர் வந்த பாலாமணி, வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். தகவல் அறிந்த கணவர் சண்முகம் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றார். அங்கு மனைவியின் உயிரற்ற உடலைப் பார்த்து அதிர்ந்த  சண்முகம், மாரடைப்பால் மரணமடைந்தார்.

கணவர் மனைவி இருவரும் மரணமடைந்த சம்பவம் சிறுமுகை பகுதயில் பெரும் அதிர்ச்சியை அற்படுத்தி உள்ளது.