கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் செய்த கொடூரம்!. பரபரப்பு தீர்ப்பு!

சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் தொப்பாகவுண்டர். இவரின் மகள் சசிகலா என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

சசிகலாவிற்கு திருமணம் ஆன நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மேலும் வீராணம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரோடு அவருக்கு பழக்கம் இருந்துவந்தது.

ராஜா என்பவர் சசிகலாவை தினமும் மருத்துவமனையில் விட்டுச் செல்லுவதும், மாலை பணி முடிந்ததும் வீட்டில் கொண்டே விடுவதுமாக இருந்துள்ளார். இது, சசிகலாவின் தந்தை தொப்பக் கவுண்டருக்குத் தெரிந்ததால் சசிகலாவைக் கண்டித்துள்ளார்.

தன்னுடைய தந்தையின் பேச்சைக் கேட்காமல் சசிகலா, ராஜாவிடம் நெருக்கமாகவே தொடர்ந்து பழகிவந்துள்ளார். இதையடுத்து தமது மகளை தொப்பகவுண்டர் தொடர்ந்து கண்டித்ததால், அவர்கள் கள்ளக்காதலுக்கு தடையாய் இருக்கும் தொப்பக்கவுண்டரை, சசிகலாவும் அவரின் கள்ளக்காதலன் ராஜாவும் சேர்ந்துகொலைசெய்ய திட்டம் போட்டுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு முன்பு வீராணத்தில் உள்ள இரு ரவுடிகளின் துணையோடு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தொப்பக்கவுண்டரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த விசாரணையின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில் சசிகலா, ராஜா, மற்றும் சிறந்து ரவுடிகள் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.