தனியார் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் எந்தவொரு கெட்டப்பெயரும் வாங்காமல் கடைசிவரை வந்து வெற்றியைத் தட்டிச் சென்றவர் ரித்விகா.
அவர் தான் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த 50 லட்சத்தில் 25 லட்சத்தினை தன்னுடைய நீண்ட நாள் கனவு வீட்டுக்கும், மீதி 25 லட்சத்தினை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காகவும் கொடுத்துள்ளார்.
ரித்விகா வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை, அவருக்கு உதவி செய்யும் அளவிற்கு குடும்ப பின்னணியும் இல்லை.இருப்பினும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று இவ்வாறு செய்த ரித்விகாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ரித்விகா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.