கனமழை..! யாரும் வெளியே வர வேண்டாம்..!! எச்சரிக்கை ..!!

நேற்றிலிருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதன்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன் படி தற்போது சென்னை வடபழனி, கிண்டி, ராயப்பேட்டை, பாரிமுனை, அண்ணாசாலை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, சேலம், கரூர், புதுக்கோட்டை, ஈரோடு, தருமபுரி, கோவை, நாகை ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதலே அனைத்து இடங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.