தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அவர்கள் நேற்று முன்தினம் வழக்கம் போல உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்த் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்காலிகமாக டயாலிசிஸ் என்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக வாரத்துக்கு இரண்டு முறை சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும், நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்த விஜயகாந்த், அடுத்தகட்ட சிகிச்சைக்காக மீண்டும் விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.