தமிழகத்தில் கோவில்களில் உள்ள புராதன சிலைகள் கடப்படுவதை தடுக்கவும், அந்த சிலைகளை மீட்டு எடுக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் தொழிலதிபர் ரன்விர்ஷா வீட்டை சோதனை செய்ததில் 60க்கும் மேற்பட்ட சிலைகளும் அறிய கல் தூண்களும் கிடைக்கப் பெற்று உள்ளன. இதில் நான்கு ஐம்பொன் சிலைகளும் அடக்கம்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் இந்த விடயம் குறித்து செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், ”தமிழகதில் கடத்தப்பட்ட சிலைகளை தங்களது வீட்டில் வைத்திருந்தால், அதனை தாமாக முன்வந்து ஒப்படைத்து விடுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கே கடத்தல் சிலை பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதாக, பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அதிச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் கூறியதாவது, ”பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே” என்று கூறியுள்ளார்.