கைம்பெண்ணை திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!

நெல்லை அருகே கைம்பெண்ணை (கைம்பெண்) திருமணம் செய்துகொண்ட வாலிபரை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே முத்தம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பாரதிராஜா (வயது 19). இவர் ஜேசிபி வாகன ஓட்டுநராக உள்ளார்.

பாரதிராஜாவுக்கும் ராஜாங்கபுரத்தை சேர்ந்த கணவரை இறந்து, 5 வயது மகனுடன் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டு உள்ளது. பாரதிராஜாவை விட 6 வயது மூத்தவர் அந்த பெண்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணை ஒரு கோவிலில் வைத்து பாரதிராஜா திருமணம் செய்து கொண்டார். பின் அந்த பெண்ணும் அவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இவர்களின் திருமணம் பாரதிராஜாவின் வீட்டுக்கு தெரியவரவே, பாரதிராஜாவை அழைத்து அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பாரதிராஜா சம்பவத்தன்று விஷத்தை குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தென்காசியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கடையம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.