அலைபேசிகளில் உள்ள பல செயலிகள் மூலமாக நாம் தினமும் பல்வேறு விசயங்களை அறிந்துகொண்டே வருகிறோம். அந்த செயலிகளை நாம் உபயோகப்படுத்தும் விதத்தை வைத்தே நாம் நமது தகவல்களை பரப்புகின்றோம் மற்றும் பகிர்கின்றோம்.
அந்த வகையில் நமது அலைபேசிக்கு யாரேனும் அறிமுகம் இல்லாத நபர் தொடர்பு கொள்ளும் நிலையில் அவரின் பெயரை நாம் அறிய வாய்ப்பில்லாமல் இருந்தது. அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயலியே “TRUE CALLER” ஆகும்.
இந்த செயலியில் நமது அலைபேசிக்கு தொடர்பு கொள்ளும் நபர்களை பற்றிய தகவலை மட்டுமே அறிய முடிந்தது.
தற்போது இந்த செயலியின் உதவியால் மற்றொருவருடன் முகநூல் மற்றும் வாட்சப்ல் பேசுவது போலவே இனி இந்த செயலியின் உதவியாலும் அனைவரிடமும் “CHAT” செய்ய இயலும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வதந்திகள் இந்த செயலியின் மூலம் பரவினால் அந்த நபரின் மீது புகார் அளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.