60 பெண்கள்., 8 ஆண்டுகள்., என்னனு நான் சொல்ல?

இராமநாதபுரம் மாவட்டம் கடம்பூரை சார்ந்தவர் ரவி. இவர்க்கு தையல் ரவி என்ற அடைமொழியும் உள்ளது. இவன் விபசாரத்தொழில் மேற்கொண்டு வந்தான்.

ரவி சென்னையில் கடந்த 8 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தொழில் நடத்தி வந்தார். இவர் பிரச்சனை அளிக்கும் காவலர்களுக்கு பணம் வழங்கி சரிசெய்து தனது விபச்சார தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் சுமார் 60 பெண்களை தன்வசம் வைத்துக்கொண்டு விபசாரத்தொழிலை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவரை கைது செய்ய முடிவு செய்த விபச்சார தடுப்பு காவல் அதிகாரிகள் இவரின் குடியிருப்பிற்கு சென்று சோதனை செய்த போது அவர் முன்னதாகவே தப்பிஓடியதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் அங்கேயேதான் சிலநாட்களுக்கு பின்னர் தனது தொழிலை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இவரின் மீது சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற அமைப்பினர் அளித்த வழக்குகள் அதிகமானதை தொடர்ந்து இவரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் காவல் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் இவர் விபச்சார தொழிலை செய்வதற்கு காவல் அதிகாரிகள் அனைவருக்கும் கையூட்டு வழங்கியது உறுதிசெய்யப்பட்டது. விசாரணை முடிந்த பின்னர் இவரை காவல் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.