காதல் கணவனும், ஆசை மகளும் இறந்தது தெரியாமல் இருக்கும் இசை பிரபலத்தின் மனைவி!

மலையாள சினிமாவில் அதிகமாக பிரபலமான இசையமைப்பாளர் தான் பாலா பாஸ்கர். இவரின் மிக சிறிய வயதிலேயே இசையை கொண்டு சாதனை படைத்தது இசையமைப்பாளராக வெற்றி பெற்றவர்.

இதற்கிடையில் சமீபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் அவர் குடும்பத்துடன் (மனைவி மற்றும் மகள்) சேர்ந்து கோவிலுக்கு சென்றுள்ளார். கோவில் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக வந்துகொண்டிருக்கும்போது அவர்கள் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அவரது மகள் தேஜஸ்வினி (2 வயது) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

பாலபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி லட்சுமி அதிக காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

கணவர் மற்றும் குழந்தை தேஜஸ்வினி இறந்த செய்தி அவரின் மனைவி லட்சுமிக்கு இன்னும் தெரியாது. லட்சுமி தொடர் சிகிச்சையில் இருப்பதால் தற்போது இந்த விஷயத்தை அவரிடம் தெரிவிக்காமல் உள்ளனர் பாலாபாஸ்கரின் உறவினர்கள். கணவன் மற்றும் குழந்தை உயிரிழந்தது தெரியாமல் லட்சுமி இருப்பது அவரது உறவினர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.