ஜெயலலிதா மரண விவகாரத்தில் திடீர் திருப்பம் : ஓ.பி.எஸ் உள்நுழைக்கப்படுகிறாரா..? வெளியாகவுள்ள பரபரப்பு அறிக்கை.!

ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சென்ற வருடம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர், சசிகலா, உயர் காவல் அதிகாரிகள், மருத்துவர்கள் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது.

இந்நிலையில், வரும் அக்டோபர் 24-ம் தேதியோடு ஆணையத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதுவரை ஆணையத்தில் 107 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களோடு அமைச்சர்கள் பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களையும் ஆணையத்தின் தரப்பில் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆணையமும் அவர்களை விசாரணைக்கு அழைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் இவர்களை எல்லாம் வரிசையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உள்ளது.