வவுனியாவில் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான கனமழை பெய்துவருகிறது.
இடி மின்னலுடன் கூடிய மழையும் ஆங்காங்கே நிலவுகின்ற நிலையில் மக்கள் மத்தியில் ஒருவித குழப்பமும் அச்சமும் நிலவுகின்றமையை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக இந்த வருட பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகள் தயாதாகிவரும் நிலையில் மழை வெள்ளம் வயல்வெளியெங்கும் நிறைந்திருக்கிறது.
“ஏற்கனவே ஒரு கிழமைக்கு முன்னர் விதைக்கப்பட்ட வயல்களில் நெல் முளைத்திருக்கின்றது. அவ்வாறு முளைத்த வயல்களில் நாற்றுக்களை மேவி நிற்கும் வெள்ளத்தால் அவை அழியும் தறுவாயில் உள்ளது” என்கிறார் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி.
இன்று மாலை பெய்யத்தொடங்கிய கன மழை வவுனியாவில் பல பகுதிகளிலும் மன்னாரில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.