தமிழகமே முடங்கும் அபாயம்! அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள். கடந்த சில வருடங்களாகவே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசு வழங்காததால் அவ்வப்போது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்ததால், பொது மக்கள் பொங்கல் விழாவிற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. தற்காலிக பணியாளர்களை கொண்டு அரசு ஓரளவு சமாளித்த நிலையில் இறுதியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

பின்னர் தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறைவேற்றாத காரணத்தால் அவ்வப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்துக் கொண்டிருந்தனர். இன்று காலை சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பாக கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்றது. முடிவில் அனைத்து தொழிற்சங்க போராட்ட காரர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக போராட்டம் இருப்பதால் பொங்கலை போலவே தீபாவளிக்கு முன்னரும் விழாக் காலங்களில் அதிக அளவு பயணிகள் பயணிக்கும் நேரத்தில் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேரலாம் என தெரிகிறது