தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்: கடிதம் சிக்கியது!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 11 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இன்றி தவித்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் பலாசா பகுதியில் குடியிருந்து வருபவர்கள் கனகதுர்கா(33) மற்றும் அவரது கணவர் வெங்கட சத்யநாராயணா ஆகியோர்.

திருமணமாகி இருவருக்கும் 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் குழந்தைகள் இல்லை என்ற கவலை கனகதுர்காவை கவலையில் ஆழ்த்தி வந்துள்ளது.

இதே காரணத்தால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டும் வந்துள்ளது.

இந்த நிலையில் புதனன்று காலை கண்விழித்து பார்த்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கனகதுர்கா மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மேற்கொண்ட சோதனையில் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அதில் திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த பின்னரும் குழந்தை இல்லை என்ற கவலை தம்மை வாட்டி வந்ததாகவும், அதனாலையே தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் கடிதம் மற்றும் கணவரின் மொழியில் சந்தேகம் இருப்பதாக கருதிய பொலிசார், வழக்கை தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.