கொடிய பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் சிறுவன்!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 3 வயது சிறுவன் கொடிய விஷம் கொண்ட இரண்டு பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணிளியில், அந்த 3 வயது சிறுவன் பாம்புகளை எந்த பயமும் இன்றி தூக்கி விளையாடுகிறான், அதன் மீது உட்காருகின்றான்.

இந்த காட்சிகளை பலர் பதற்றத்துடன் கண்டு நிர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் பாம்பு ஒன்றை அள்ளி எடுத்த சிறுவன், அதை கோபத்துடன் தூக்கி வீசுகின்றான்.

மகனின் செயல் கண்ட அவனது தந்தை, மகனை கண்டிக்கிறார், பாம்பை அவ்வாறு தூக்கி வீசாதே என்கிறார்.

இந்த காட்சிகளை காண்டு நின்ற மக்கள், அந்த சிறுவனின் குடியிருப்பில் பாம்பு வளர்ப்பது எங்கள் அனைவருக்கும் தெரியும், அந்த சிறுவன் இதேபோன்று தான் எப்போதும் பாம்புகளுடே விளையாடுவான் என்றனர்.