அடியோடு அகற்ற உத்தரவு : எத்தனை உயிர்கள் பறிபோக போகிறதோ..?

திருவாரூரில் நடைபெற்ற துய்மை இந்தியா திட்ட பணிகள் ஆய்வு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கும்பகோணத்தில் இருந்து குடவாசல் வழியாக திருவாரூர் சென்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

அவர் தடையின்றி சாலையில் பயணம் செய்ய குடவாசல் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளும் அகற்றியதை அடுத்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

உடனே வேகதடை அமைக்கவில்லை என்றால் விபத்துகள் எற்படும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

ஆளுநர் வரும் சாலையில் வேகதடை இருக்கக் கூடாது.ஆனால் சாதாரண மக்கள் செல்லும் சாலையில் புதைகுழி அளவுக்கு குழிகள் உள்ளது.

இதனை சீர் செய்ய அரசுக்குநேரம் இல்லை. ஆனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு படுமோசமான இடங்களில் ஆய்வு செய்து நெடுஞ்சாலை துறை சார்பாக குடவாசலில் இருந்து திருவாரூர் வரையில்10க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைந்துள்ளன.

இதனை ஆளுநர் வருகையையொட்டி உடைத்து புதிதாக சாலை போடப்பட்டு உள்ளது. புதன்கிழமையன்று காலையில் ஆளுநர் பத்து நிமிடத்தில் கடந்து சென்று விட்டார்.

ஆனால் அபாயகரமான வளைவுகளில் உள்ளசாலை வேகதடை இன்றி இருப்பதால் இனி எத்தனை விபத்துகள் நடக்கும் என தெரியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.